332. திருக்குறுங்குடி - A Model Village
எனது திருக்குறுங்குடி கிராமமும் கைசிக நாட்டிய நாடகமும் என்ற பதிவின் தொடர்ச்சியாக, அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.
திருக்குறுங்குடியை தத்து எடுத்துக் கொண்டுள்ள (TVS ஏற்படுத்தியுள்ள ) டிரஸ்ட் சாதிமத வேறுபாடின்றி, கிராமத்தினர் அனைவருக்கும் உதவி வருகிறது. கிராமம் பச்சை பசேலென்று செழிப்பாகக் காட்சியளிப்பது கண்ணைக் கவர்வதாய் உள்ளது. இக்கிராமத்திலேயே தங்கி, வளர்ச்சிப் பணியை மேற்பார்வையிட்டு வரும் பத்ரி என்பவர், திருக்குறுங்குடியை தத்து எடுப்பதற்கு முன் அங்குள்ள நிலைமை குறித்து ஓர் ஆய்வு நடத்தி, அதன் தொடர்ச்சியாக பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, தண்ணீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
TVS டிரஸ்ட்டானது, கிராம சுய உதவிக் குழுக்களையும், இளைஞர் நற்பணி மன்றங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதால், கிராம வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையோடும், முனைப்போடும் தங்கள் பங்கை ஆற்றுகின்றனர். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் 25000 ரூபாய் வருமானம் ஈட்ட வழி செய்வதை டிரஸ்ட் தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
டிரஸ்ட்டின் முயற்சியால், பால் கூட்டுறவு மையங்கள் தொடங்கப்பட்டு, பால் உற்பத்தி பெருகி, ஆவின் போன்ற பெரு நிறுவனங்களுக்கு பாலை நேரடியாக விற்று, அதிக லாபம் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. தற்போது "வெர்மி கம்போஸ்டிங்" (Vermi Composting) சிறு தொழிலும் நல்ல லாபம் தரும் ஒன்றாக மாறி வருவதை பார்க்க முடிகிறது.
கிராமத்தில் 556 விவசாயக் குடும்பங்களும், 150 ஹெக்டேர் விளைநிலமும் உள்ளன. டிரஸ்ட் ஆனது, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணையோடு, விவசாயிகள் நல்ல விதைகளை பயன்படுத்தவும், தங்கள் அணுகுமுறையில் (விளைச்சல் பெருகுவதற்கு) மாற்றங்களை கை கொள்ளவும் வைத்துள்ளது. அதன் பயனாக, முன்னர் மாநில சராசரி அளவு விளைச்சலை விட குறைவாக இருந்த (நெல் மற்றும் வாழையின்) விளைச்சல், தற்போது பல படங்கு பெருகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
டிரஸ்ட் ஆனது, திருக்குறுங்குடி அருகே உள்ள இன்னும் 10 கிராமங்களை சமீபத்தில் தத்தெடுத்துள்ளது. திருக்குறுங்குடியில் கணினி மையங்களும், டிரஸ்ட்டின் உதவியோடு அமைக்கப்பட்டு, கிராமத்து மாணவ மாணவிகள் ஆர்வமாகக் கற்று வருகின்றனர்.
இறுதியாக ஒரு சிந்தனை: இந்தியாவில் மொத்தம் 6,38,365 கிராமங்கள் உள்ளன. திருக்குறுங்குடிக்கு TVS டிரஸ்ட உதவுவது போல, அம்பானி, ஜிந்தல், முருகப்பா, ITC போன்ற பெரு நிறுவனங்களும், சில பல கிராமங்களின் மேம்பாட்டுக்காக, டிரஸ்ட்கள் அமைத்து உதவி செய்து வந்தாலும், மத்திய / மாநில அரசுகளின் சீரிய திட்டங்கள் / உதவி இல்லாமல், இந்திய கிராம மேம்பாடு முழுதாக சாத்தியமில்லை என்பது நிதர்சனம்!
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 332 ***
7 மறுமொழிகள்:
Test comment !
நல்ல தகவல்கள் பாலா. நன்றி.
Inspiring news. I really liked the way they are helping in agriculture
by getting new tecnology and new seeds.........India has a long way to go in terms of agriculture.
with best
CT
அழகான எங்கள் திருக்குறுங்குடி பற்றி
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
உண்மையான சேவை அங்கே நடக்கிறது.
டி.வி.எஸ் தாங்கள் வேர்களை
மறக்காமல் செய்யும் பணிகள் நல்லபடியாகத் தொடர வேண்டும்.
Kumaran, CT, Valli Simhan,
nanRi, thangkaL varavukku !
இப்பதிவையும் முந்தைய கைசிக புராண அரையர் சேவை பற்றிய பதிவையும் அச்சமயங்களில் எப்படியோ தவற விட்டுள்ளேன்.
கண்ணபிரான் அவர்கள் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து வந்தேன்.
பிறர்க்கு உபகாரம் செய்வதை உங்கள் முக்கியக் கொள்கையாக ஆக்கிக் கொண்ட பிறகு இம்மாதிரி செய்திகள் உங்கள் மனத்தை கவர்வதில் ஆச்சரியமே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
good post..
ithai martta Companies sum follow panneenal konjam villages munnaeralam.for everthing Govt. taiyae depend pannuvathu no use. Some private sectors must evince some interest in bringing up the villages and people who lead their life below poverty. velichatthukku kondu vanthirukkireerkal
Post a Comment